ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பாளர்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்து மருந்து இருப்பு மற்றும் புறநோயாளிகள் பதிவேட்டினை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கண்காணிப்பாளர்.
தமிழக அரசு மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன தன் ஒரு பகுதியாக மக்களை தேடி மருத்துவம் இன்னுயிர் காப்போம் 48 உள்ளிட்ட மகத்தான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு தமிழக முழுவதும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள திருவாரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் இன்று திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டத்திற்கு உட்பட்ட கோவில்வெண்ணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெளிநோயாளிகள் பதிவேடு, மருந்துகளின் இருப்பு விவர பதிவேடு உள்ளிட்டவைகளை பார்வையிட்டு மருந்துகளின் இருப்பு விவரம் குறித்து மருத்துவரிடம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் ப.காயத்ரி கிருஷ்ணன், மாவட்ட ஆட்சித் தலைவர் சாருஶ்ரீ கேட்டறிந்தார். இவ்ஆய்வில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் புஹாரி, மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் யோகேஸ்வரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சித்ரா வேளாண்மைதுறை இணை இயக்குநர் பாலசரஸ்வதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஹேமா ஹெப்சிபா நிர்மலா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.