முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அடுத்த கோயில் மணி பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளியில் மாவட்ட ஆட்சியர் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை ஆய்வு மேற்கொண்டார்.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம்,கோவில்வெண்ணி அரசு தொடக்கபள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் ப.காயத்ரி கிருஷ்ணன்,மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சாருஸ்ரீ கேட்டறிந்தார். இவ்ஆய்வில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் புஹாரி, மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் யோகேஸ்வரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சித்ரா வேளாண்மைதுறை இணை இயக்குநர் பாலசரஸ்வதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஹேமா ஹெப்சிபா நிர்மலா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.