தென்னிலை- லாரி அருகே நின்றிருந்த டிரைவர் மீது ஆம்னி பேருந்து மோதி உயிரிழப்பு.
தென்னிலை- லாரி அருகே நின்றிருந்த டிரைவர் மீது ஆம்னி பேருந்து மோதி உயிரிழப்பு.
தென்னிலை- லாரி அருகே நின்றிருந்த டிரைவர் மீது ஆம்னி பேருந்து மோதி உயிரிழப்பு. திருச்சி மாவட்டம், தொட்டியம், காட்டுப்புத்தூர் அருகே உள்ள காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் அருண்குமார் வயது 36. இவர் லாரி டிரைவர். ஜனவரி 9-ம் தேதி நள்ளிரவு 1:15-மணி அளவில், கோவை- கரூர் சாலையில் இவரது லாரியில் வந்த அவர், தென்னிலை,முருகன் பெட்ரோல் பங்க் எதிரே லாரியை நிறுத்தி விட்டு அருகில் நின்று கொண்டு இருந்தார். அப்போது, அதே சாலையில் சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் அருகே மணக்குடி பகுதியைச் சேர்ந்த குணசேகரன் வயது 38 என்பவர் வேகமாக ஓட்டி வந்த ஆம்னி பஸ், நின்று கொண்டிருந்த அருண்குமார் மீது மோதி விபத்து ஏற்பட்டது. படுகாயம் அடைந்த அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அருண்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவம் அறிந்த அருண்குமாரின் மனைவி சுகன்யா, இது தொடர்பாக காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த அருண்குமாரின் உடலை அதே மருத்துவமனை சவக்கிடங்குக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தென்னிலை காவல் துறையினர்.