கல்லூரி மாணவி மற்றும் இளம்பெண் மாயம்

காரிமங்கலம் அருகே கல்லூரி மாணவி மற்றும் இளம் பெண் மாயம் காரிமங்கலம் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை.

Update: 2025-01-10 12:56 GMT
தர்மபுரி மாவட்டம். காரிமங்கலம் அடுத்த மாட்லாம்பட்டியை சேர்த்தவர் திருமால், இவரது மகள் கிருத்திகா தனியார் பெண்கள் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 6 மாதங்களாக கல்லூரிக்கு செல்லாத நிலையில், நேற்று முன் தினம் வீட்டை விட்டு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காத தால், அவரது பெற்றோர் காரிமங்கலம் காவல் நிலையத்தில் இந்தது புகார் அளித்தனர். இதன் பேரில், காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் பொம்மஅள்ளி பகுதியைச் சேர்ந்த நாராயணமூர்த்தி மகள் அபிநயா சப்பாணிப் பட்டி பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற அபிநயா, பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகள் என பல்வேறு பகுதிகளில் தேடியும், கிடைக்காத்தால் அவரது தந்தை இன்று அளித்த புகாரின் பேரில், காரிமங்கலம் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News