போச்சம்பள்ளி அருகே இரண்டு கோவில்களில் நகை,பணம் திருட்டு.
போச்சம்பள்ளி அருகே இரண்டு கோவில்களில் நகை,பணம் திருட்டு.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் அடுத்துள்ள தட்டரஅள்ளி கிராமத்தில் உள்ள ஸ்ரீ கக்கு மாரியம்மன் கோவிலில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் கோவில் கருவறை பூட்டை உடைத்து அம்மனின் கழுத்தில் இருந்த 10 கிராம் குண்டு மணிகள் தாலி திருடி சென்றனர். அதேபோல் கரிய கவுண்டனூர் கிராமத்தில் மாரியம்மன் கோவிலில் மர்ம நபர்கள் கோவில் மாரியம்மன் கழுத்தில் இருந்த 2 கிராம் தங்கத் தாலி மற்றும் உண்டியல் உடைத்து பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.இது குறித்து புகாரின் பேரில் நாகரசம்பட்டி காவல் ஆய்வாளர் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர்.