கடையநல்லூர் தேமுதிக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தேமுதிக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மணிக்கூண்டு முன்பு தேமுதிக கட்சி சார்பில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கடையநல்லூர் பகுதியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு ரூ.1000 வழங்கிட வேண்டும்; வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ரூ.2000 வழங்கிட வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தேமுதிக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.