குமரி மாவட்டம் கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிற்கூடத்தில் நிரந்தரம் மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் 52 பேர் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களுக்கு இஎஸ்ஐ மருத்துவக் காப்பீடு உட்பட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த நவம்பர் மாதம் 25ந்தேதியிலிருந்து தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது. இதில் இரண்டு முறை அதிகாரிகளுடன் நடந்தபேச்சு வார்த்தைகள் நடத்தியும் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் இன்றுடன் 10-ம் தேதி உண்ணாவிரதப் போட்டம் 47 வது நாளாகிறது. இந்நிலையில் கோரிக்கையை வலியுறுத்தி இன்று தொழிற்கூடம் முன்பு அண்ணா தொழிற்சங்க செயலாளர் சந்திரசேகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.