ரத்தினகிரி கோவில் சிறப்பு பூஜை வழிபாடு!
ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் அகல் விளக்குகளை கையில் ஏந்தி சிறப்பு வழிபாடு
ஆற்காட்டை அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் மார்கழி மாத கிருத்திகையை முன்னிட்டு மூலவர் விநாயகர், மற்றும் வள்ளி தெய்வானை, பாலமுருகனுக்கு பால், இளநீர், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாரதனை நடந்தது மாலையில் கோவில் மலைஅடிவாரத்தின் கீழே உள்ள அறுகோண தெப்பக்குளத்தில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் பாலமுருகன் சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் வலம் வந்தார். கோவில் பரம்பரை அறங்காவலர் பாலமுருகனடிமை சுவாமிகள் தலைமையில் சிறப்பு அறுகோண தெப்பக்குளத்திற்கு தீபாரதனை காட்டப்பட்டது.