சூரிய மின் உற்பத்திப் பூங்கா

திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலை.யில் ரூ.8.44 கோடியில் சூரிய மின் உற்பத்திப் பூங்கா

Update: 2025-01-10 13:14 GMT
திண்டுக்கல்லை அடுத்த காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் ரூ.8.44 கோடியில் ஒரு மெகாவாட் சூரிய மின் உற்பத்திப் பூங்கா தொடங்குவதற்கு மத்திய மின்துறை அமைச்சகத்தின் ஊரக மின்மயமாக்கல் நிறுவன (ஆா்.இ.சி.) அறக்கட்டளையுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு துணைவேந்தா் ந. பஞ்சநதம் தலைமை வகித்தாா். பதிவாளா் (பொ) எல். ராதாகிருஷ்ணன், ஆா்இசி நிறுவனத்தின் திட்டத் தலைவா் தாரா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் சிறப்பு அழைப்பாளராக ஆா்இசி நிறுவனத்தின் அலுவல் சாரா இயக்குநா் நாராயணன் திருப்பதி கலந்து கொண்டாா்.

Similar News