விழுப்புரத்தில் போலீசார் சார்பில் ஹெல்மட் விழிப்புணர்வு பேரணி
போலீசார் சார்பில் ஹெல்மட் விழிப்புணர்வு பேரணி
விழுப்புரம் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.நேற்று விழுப்புரம் உட்கோட்ட காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை சார்பில் தலைக்கவசம் அணிவதை வலியுறுத்தி வாகன விழிப்புணர்வு பேரணி நடந்தது.விழுப்புரம் பெருந் திட்ட வளாகத்தில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணியை எஸ்.பி., சரவணன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.ஏ.எஸ்.பி., ரவீந்திரகுமார்குப்தா, இன்ஸ்பெக்டர்கள் ஷாகுல் அமீது, சித்ரா, கல்பனா, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வசந்த், வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தனர்.போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர்கள் குமார ராஜா, விஜயரங்கன் மற்றும் போலீசார், இருசக்கர வாகன பழுதுபார்ப்போர் சங்கத்தினர் உள்ளிட்ட 100 பேர் கலந்துகொண்டு, இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து பேரணியாக சென்றனர்.இந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி, பெருந்திட்ட வளாகத்தில் துவங்கி திருச்சி சாலை சிக்னல் சந்திப்பு நேருஜி ரோடு காந்தி சிலை வழியாக, விழுப்புரம் ரயில் நிலையம் வரை சென்றனர்.வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து வாகன ஓட்ட வேண்டும், சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர்.