கரூரில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சி மொழி சட்டவாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கரூரில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சி மொழி சட்டவாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.;

Update: 2025-12-26 06:36 GMT
கரூரில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சி மொழி சட்டவாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உலகின் மூத்த மொழியாக தொடர்ந்து வரும் தமிழ் மொழி அந்நிய படையெடுப்பு மற்றும் அயல் நாட்டினர் வருகையினால் தமிழ் மொழி நாளுக்கு நாள் சிதைவுற்று வருகிறது. மூத்த மொழியாக இருக்கும் தமிழ் மொழியை காக்க ஆண்டுதோறும் தமிழக அரசு தமிழ் வளர்ச்சி துறை சார்பில் ஆட்சி மொழி சட்ட வாரம் என்ற தலைப்பில் தமிழ் மொழி காக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து இன்று கரூர் தா தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் தமிழகத்தின் பாரம்பரிய கலையான பரதநாட்டியத்தை கலைஞர்கள் தமிழால் பாடி ஆடி அனைவரையும் உற்சாகப்படுத்தினர். தொடர்ந்து தமிழை போற்றும் வகையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி கரூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் ஜோதி தலைமையில் நடைபெற்றது. இந்தப் பேரணியை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணியில் கரூரில் செயல்படும் சாரதா கலை அறிவியல் கல்லூரி மாணவியர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழை காப்போம்,தமிழ் மொழியை காப்போம், தமிழால் பேசுவோம், ஆங்கில மொழி கலப்பில்லாமல் தமிழை பயன்படுத்துவோம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி கோஷங்களை எழுப்பி தாந்தோணி மலை கடைவீதி வரை பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியவாறு சென்று மீண்டும் அரசு கலைக் கல்லூரிக்கு வந்தடைந்தது. இந்த நிகழ்ச்சியில் முனைவர் கடவூர் மணிமாறன், கவிஞர்கள் சட்டஇனியன், நஞ்சை புகழூர் அழகேசன், கோ. செல்வம், திருக்குறள் கூட்டமைப்பின் செயலாளர் திருமூர்த்தி, தலைவர் வையாபுரி, திருக்குறள் பேரவை செயலாளர் மேலை. பழனியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை சிறப்பித்தனர்.

Similar News