விழுப்புரத்தில் 6.20 லட்சம் பேர்: ரேஷன் கடைகளில் விநியோகம் துவக்கம்

6.20 லட்சம் பேர்: ரேஷன் கடைகளில் விநியோகம் துவக்கம்

Update: 2025-01-10 03:55 GMT
விழுப்புரம் மாவட்டத்தில்,தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழக அரசின் பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம்,விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள ரேஷன் கடையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் இலவச வேட்டி சேலையை கலெக்டர் பழனி வழங்கி துவக்கிவைத்தார்.அப்போது அவர் கூறுகையில், பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலையும் வழங்கப்படுகிறது.விழுப்புரம் மாவட்டத்தில் 6 லட்சத்து 19 ஆயிரத்து 756 குடும்ப அட்டைதாரர்கள், 435 இலங்கை தமிழர் முகாம்களில் வசிப்பவர்கள் என மொத்தம் 6 லட்சத்து 20 ஆயிரத்து 191 குடும்ப அட்டைதாரர் களுக்கு ரூ.7.01 கோடி மதிப்பீட்டில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படவுள்ளது என்றார்.

Similar News