கோட்டை பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டை அருள்மிகு பர வாசுதேவர் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு சிறப்பு வழிபாடு
வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, இன்று அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடைபெறுவது வழக்கம் இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தின் மிகவும் பழம் பெறும் கோவில்களில் ஒன்றான கோட்டை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பர வாசுதேவ பெருமாள் கோவிலில் இன்று ஜனவரி 10 விடியற்காலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பகுதியில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கோவிந்தா கோஷம் முழங்க சொர்க்கவாசல் எனப்படும் பரமபத் வாசல் காலை சரியாக 4.30 அளவில் வர லட்சுமி உடனமர் பரவாச தேவர் சுவாமி பரமபதவாசல் வழியாக ஆலயத்திலிருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் திருவீதி உலா நடைபெற்றது இதில், பக்தர்கள் உட்பட தருமபுரி எம்.பி.மணி, முன்னாள் எம்.எல்.ஏ தடங்கம் சுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.