காதுகள் அறுத்து மூதாட்டி கொலை.
மதுரை சோழவந்தான் அருகே மூதாட்டி காதுகள் அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் காலனியைச் சேர்ந்த சின்ன காளையின் மனைவி பாப்பாத்தி (80.) என்பவர் நேற்று முன்தினம் (ஜன.10) இரவு அவரது ஊரான திருவேடகம் காலனி வைகை ஆற்றில் இரண்டு காதுகள் அறுக்கப்பட்டு காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இது தொடர்பாக சோழவந்தான் போலீசார் விசாரணை நடத்தினர். இறந்த பாப்பாத்தியின் காதுகள் அறுக்கப்பட்டு இருப்பதால் இவர் அணிந்திருந்த தங்கத்தோடுகளை திருடி செல்லும் நோக்கில் இந்த படுகொலை நடந்ததா அல்லது வேறு காரணங்களுக்காக கொலை செய்துவிட்டு போலீசாரின் கவனத்தை திசை திருப்ப காதுகளை அறுக்கப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து இந்த படுகொலை குறித்து, போலீசார் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.