விழுப்புரத்தில் கூட்டுறவு மண்டல அளவிலான பணியாளர் நாள் கூட்டம்
கூட்டுறவு மண்டல அளவிலான பணியாளர் நாள் கூட்டம்
தமிழகத்தில் கூட்டுறவு துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டபடி, கூட்டுறவுச் சங்க பணியாளர்களின் குறைகளை தீர்வு செய்திடும் வகையில், இரு மாதங்களுக்கு ஒருமுறை மண்டல அளவில் பணியாளர் நாள் நிகழ்வு நடத்தப்படுகிறது.அதன்படியும், கூட்டுறவு சங்க பதிவாளர் ஆணைப்படியும், விழுப்புரம் மண்டலத்தின் நான்காவது பணியாளர் நாள் கூட்டம் நேற்று நடந்தது. விழுப்புரம் மண்டல கூட்டுறவு சங்க அலுவலக கூட்டரங்கில், மண்டல இணை பதிவாளர் விஜயசக்தி தலைமையில் கூட்டம் நடந்தது.கூட்டுறவு சங்க பணியாளர்கள், தங்களின் குறைகள் மற்றும் கோரிக்கை மனுக்களை அளித்தனர். 24 மனுக்கள் பெறப்பட்டு, கூட்டுறவு இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுக்கள் மீது, விதிகளின்படி விரைந்து தீர்வு காணப்படும் என இணை பதிவாளர் தெரிவித்துள்ளார்.