கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., கல்வி நிறுவனங்கள் சார்பில் நடந்த, ஐந்தினை பொங்கல் விழாவிற்கு கல்வி நிறுவனங்களின் தாளாளர் டாக்டர் மகுடமுடி தலைமை தாங்கினார். செயலாளர் கோவிந்தராஜூ முன்னிலை வகித்தார். நிர்வாக அலுவலர் மோகனசுந்தர் வரவேற்றார். முதல்வர்கள் ஜெயசீலன், சரண்யாதேவி, தனலட்சுமி, பள்ளி துணை முதல்வர் ஜூசஸ்சுஜி வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் ஐந்து வகையான நிலங்களுக்கு சிறப்பு பூஜை செய்து, மேள தாளம் மற்றும் காளை மாடுகளுடன் பொங்கல் வைக்கப்பட்டது. தொடர்ந்து, மாணவ, மாணவிகளுக்கு கபடி, கோ-கோ, குலவை இடுதல், உரி அடித்தல், மியூசிக்கல் சேர், ரங்கோலி கோலம், கயிறு இழுத்தல் உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. தமிழ்த்துறை தலைவர் பிரவீனா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பள்ளி ஆசிரியர்கள், கல்லுாரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். துணை முதல்வர் ஜான்விக்டர் நன்றி கூறினார்.