ஈரோடு ரங்கம்பாளையம் ராஜா திருமண மண்டபம் எதிரே இரணியன் வீதியில் நாகராஜன் என்பவருக்கு சொந்தமான அம்மன் காலர் டெக்ஸ்டைல்ஸ் உள்ளது. இங்கு நேற்று முன் தினம் இரவு 11:30 மணிக்கு அதிகளவில் தொடர்ந்து கரும்புகை வெளியேறியது. அப்பகுதி மக்கள் பார்த்து ஈரோடு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.தகவல் அறிந்து வந்த மின் வாரியத்தினர் மின் சப்ளையை துண்டித்தனர். தீயணைப்பு துறையினர் சென்று 20 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர். இதில் துணிகள், இயந்திரங்கள் உள்ளிட்டவை கருகி சாம்பலானது. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. சேத மதிப்பு கணக்கிடப்படுகிறது. தாலுகா போலீசார் விசாரித்து வருகின்ற னர்.