ஒரு மாதமாக கோடி போகும் ஏரி விவசாயிகள் மகிழ்ச்சி
நல்லம்பள்ளி வட்டத்துக்குட்பட்ட நார்த்தம்பட்டி ஏரி கடந்த டிசம்பர் மாதம் முதல் தற்போது வரை நிறைந்து, நீர் வெளியே வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட லளிகம் ஊராட்சி பகுதியில் அமைந்துள்ளது நார்த்தம்பட்டி ஏரி இந்த ஏரியினை நார்த்தம்பட்டி மற்றும் லளிகம் கிராமத்து விவசாயிகள் விவசாயத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர் இந்த ஏரி நீரை அடிப்படையாக வைத்து ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் விவசாயம் நடைபெற்று வரும் சூழலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஏரி கடந்த டிசம்பர் மாதம் பெஞ்சல் புயல் காரணமாக நிரம்பி கோடி போனது. இந்தநிலையில் ஜனவரி 12 இன்று வரை ஏரி கோடி சென்று கொண்டே உள்ளது. ஏரியின் உபரி நீர் அருகே உள்ள குட்டூர் கிராம ஏரிக்கு சென்று அடைகிறது இதனால் இந்த சுற்று வட்டாரத்தில் நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்துள்ளது ஏரியில் தொடர்ந்து இருப்பதால் இந்த ஆண்டு நல்ல விளைச்சல் கிடைக்க வாய்ப்புள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.