மீண்டும் பூலாம்வலசு சேவல் சண்டைக்கு தடை விதித்து காவல்துறை சார்பில் அறிவிப்பு.

மீண்டும் பூலாம்வலசு சேவல் சண்டைக்கு தடை விதித்து காவல்துறை சார்பில் அறிவிப்பு.

Update: 2025-01-12 11:24 GMT
மீண்டும் பூலாம்வலசு சேவல் சண்டைக்கு தடை விதித்து காவல்துறை சார்பில் அறிவிப்பு. தடையை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு பலகை வைத்து எச்சரிக்கை. தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான சேவல் சண்டை போட்டி கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே பூலாம்வலசு கிராமத்தில் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. சேவல் சண்டைகள் முறைகேடுகள் நடைபெற்றதால், சேவல் சந்தைக்கு நீதிமன்றம் தடை விதித்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக நீதிமன்ற தடையாணை காரணமாக சேவல் சண்டை நடைபெறாமல் உள்ளது. இந்த ஆண்டு சேவல் சண்டை நடைபெறும் என சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகி வைரலானது. இந்நிலையில் அரவக்குறிச்சி காவல்துறை சார்பில் சேவல் சண்டை நடத்த தடை செய்யப்பட்டுள்ளது, தடையை மீறி சேவல் சண்டை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சமூக வலைத்தளங்களில் சேவல் சண்டை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று தவறான தகவல்கள் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரவக்குறிச்சி காவல்துறையினர் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். இதனால் சேவல் சண்டை வழக்கமாக நடைபெறும் இடம் வெறிச்சோடி காணப்படுகிறது. காவல்துறையினரின் இந்த அறிவிப்பு சேவல் சண்டை ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Similar News