வாலாஜாபாத்தில் பராமரிப்பற்ற பூங்கா சீரைமக்க வலியுறுத்தல்

வாலாஜாபாத் பேரூராட்சியில் பராமரிப்பின்றி உள்ள பூங்காவை சீர் செய்ய வேண்டும் என கோரிக்கை

Update: 2025-01-12 13:12 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இதில், 2வது வார்டு, சின்னக்கடை பகுதியில், அறிஞர் அண்ணா அரசினர் மேல்நிலைப் பள்ளி எதிரே கடந்த பல ஆண்டுகளுக்கு முன் பூங்கா அமைக்கப்பட்டது. அப்போது, பேரூராட்சி அலுவலகம் அப்பகுதியில் இயங்கியதால், அலுவலக வளாகத்தையொட்டி இத்தகைய பூங்கா அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டது. செயற்கை நீரூற்றுடன் அமைக்கப்பட்ட இந்த பூங்கா, ஆரம்பத்தில் செடிகள் நிறைந்து பசுமையாகவும், குளிர்ச்சியாகவும், பொது மக்களின் பொழுதுபோக்கு இடமாக ரம்மியாக காட்சி அளித்தது. நாளடைவில் முறையான பராமரிப்பின்றி போனதால், செடிகள் காய்ந்தும், செயற்கை நீரூற்று போன்றவை பழுதடைந்து இருக்கைகள் தவிர மற்றவை வீணாகின. இதனால், பூங்கா கடந்த சில ஆண்டுகளாக பயன்பாடின்றி உள்ளது. இரவு நேரங்களில் மது பிரியர்களின் கூடராமகவும் இருந்து வருகிறது. எனவே, இந்த பூங்காவை சீரமைத்து, நடைபாதை மற்றும் சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் போன்றவை ஏற்படுத்தி மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News