ஒரே நாளில் 5 சிறுவர்கள், 16 சிறுமிகள் பல்வேறு வகையான யோகாசனங்கள் செய்து உலக சாதனை

குமாரபாளையம் அரவிந்த் யோகா மையம் சார்பில், ஒரே நாளில் 5 சிறுவர்கள், 16 சிறுமிகள் பல்வேறு வகையான யோகாசனங்கள் செய்து உலக சாதனை செய்தனர்.

Update: 2025-01-12 13:20 GMT
இந்தியா அரசின் ஆயுஷ் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரவிந்த் யோகா சென்டர் மற்றும்  நோபிள் வோர்ல்டு ரெகார்ட் நிறுவனத்தின் சார்பில் உலக சாதனை நிகழ்ச்சி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடந்தது. மையத்தின் நிறுவனர் மற்றும் இந்திய யோகாசன அமைச்சக பொதுச்செயலர் அரவிந்த் தலைமை வகித்தார். இதில்  21 பேர் பல்வேறு யோகாசனங்கள் செய்தனர். முட்டைகள், ஆணி படுக்கைகள் மீது ஆசனங்கள் செய்வது, கண்ணாடி கூண்டுக்குள் யோகாசனம் செய்தல் உள்ளிட்ட அனைக்து ஆசனங்களையும் பார்வையாளர்கள் கைதைட்டி உற்சாகப்படுத்தினர். 5 சிறுவர்கள்,  16 சிறுமிகள் பல்வேறு வகையான யோகாசனங்கள் செய்த பின் இவர்களுக்கு நோபிள் வோர்ல்டு ரெகார்ட் நிறுவனத்தின் சார்பில் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டன. இதில் யோகா உலக சாதனையாளர்கள்  அரவிந்த், லாவண்யா, ஜெயகர், குவைத் நாட்டை சேர்ந்த மொஹ்மத் சபீர், மகராஷ்டிராவை  சேர்ந்த தீபேஷ் போயர் உள்பட பலர் பங்கேற்றனர். யோகா அரவிந்த் தனது 24 வயதில் யோகாசன துறை மற்றும் திரைப்பட தயாரிப்பு துறை ஆகியவற்றில் செயல்பட்டு வருகிறார்.

Similar News