பாதுகாப்பான இணைய பயன்பாடு குறித்து அண்ணா அரசு கலைக்கல்லூரியில் கருத்தரங்கு!
போலி செய்திகள், போலியான காணொளிகள் மற்றும் இணைய வழி பணமோசடிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.;
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் இணைய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் மு. ராஜேஸ்வரி (பொ) தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக நாமக்கல் மாவட்ட தேசிய தகவலியல் அலுவலர் தண்டே தேஜா கலந்து கொண்டு பேசுகையில் ...மாணவ–மாணவியர்கள் இணையதளங்களை பாதுகாப்பான முறையில் பயன்படுத்த வேண்டிய அவசியம் குறித்தும், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பயன்பாட்டின் நன்மைகள் மற்றும் தவறான பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் எடுத்துரைத்தார். மேலும், போலி செய்திகள், போலியான காணொளிகள் மற்றும் இணைய வழி பணமோசடிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் தேசிய தகவலியல் மைய அலுவலர்கள் ராஜேஷ்குமார், சுரேஷ், விலங்கியல் துறைத் தலைவர் இராஜசேகர பாண்டியன், உள்தர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் மாதவன், கணினித்துறை தலைவர் சரஸ்வதி, யூத் ரெட் கிராஸ் அமைப்பாளர் வெஸ்லி, கல்லூரி யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் மற்றும் மாணவ–மாணவியர்கள் கலந்து கொண்டனர்.