ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை ஆய்வு செய்த அமைச்சர்.

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் ஆய்வு செய்தார்.

Update: 2025-01-12 13:17 GMT
மதுரை அவனியாபுரத்தில் நாளை மறுநாள் (ஜன.14) ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ள நிலையில் இன்று (ஜன.12) மாலை வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் ஜல்லிக்கட்டு வாடி வாசல் ,கால்நடை மருத்துவ சோதனை நடைபெறும் மற்றும் முக்கிய முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தார். அப்போது இன்னும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.அவருடன் மாவட்ட ஆட்சியர் சங்கீதா காவல் கண்காணிப்பாளர் லோகநாதன், மாநகராட்சி ஆணையாளர் உயர் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பலர் இருந்தனர்.

Similar News