சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அமைச்சர் சிவசங்கர் பங்கேற்பு

ஆயிரம் நபர்களுக்கு வேஷ்டி சேலை வழங்கினார் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்

Update: 2025-01-12 16:11 GMT
குன்னம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அமைச்சர் சிவசங்கர் பங்கேற்பு பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் தெற்கு ஒன்றியம் சார்பில் குன்னம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் சா சி சிவசங்கர் கலந்து கொண்டு சிறப்பித்தார். குன்னம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மாக்கோலம் போடப்பட்டு இரண்டு பொங்கல் பானைகளில் சர்க்கரை பொங்கல், பால் பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் கலந்து கொண்ட அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. அமைச்சர் சிவசங்கர் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார். விழாவிற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் மருவத்தூர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். வேப்பூர் தெற்கு ஒன்றியத்தை சேர்ந்த அனைத்து நிர்வாகிகள் சுமார் 1000 நபர்களுக்கு வேஷ்டி சேலைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் துரைசாமி, மாவட்ட துணைச் செயலாளர் சன் சம்பத், வேப்பூர் ஒன்றிய குழு முன்னாள் தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, பொதுக்குழு உறுப்பினர் பட்டுசெல்வி ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கருணாநிதி மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரபாகரன், குன்னம் சீனிவாசன், விவசாய அணி கொளஞ்சிநாதன் மற்றும் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Similar News