ஆண்டிபட்டி டைமன் வித்யாலயா பள்ளியில் மாணவர்களின் பலவகை கல்வி விளக்க படைப்பு கண்காட்சி..
நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளியின் இயக்குனர்கள் டாக்டர் கபில் ,டாக்டர் வாகினி மற்றும் உள்ளிட்ட ஆசிரியர்கள் செய்திருந்தனர்
ஆண்டிபட்டி டைமன் வித்யாலயா பள்ளியில் மாணவர்களின் பலவகை கல்வி விளக்க படைப்பு கண்காட்சி.. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஏத்தக்கோவில் சாலையில் அமைந்துள்ள டைமன் வித்யாலயா பள்ளியில் பல வகை கல்வி அறிவை விளக்கும் வகையில் மாணவர்களின் படைப்பு கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது. கண்காட்சியினை பள்ளி தாளாளர் டைமன் பாண்டி செல்வம் துவக்கி வைத்தார். பள்ளியில் துணை முதல்வர் லதா அனைவரையும் வரவேற்று பேசினார். கண்காட்சியில் கல்வி ,சமூக, பொருளாதார கலாச்சார ,பண்பாடுகளை விளக்கும் வகையில் ஓவியங்கள் மற்றும் பல்வேறு படைப்புகளை கண்காட்சியாக வைத்திருந்தது மெய்சிலிர்க்க வைத்தது. வரும் பெற்றோர்களுக்கும், பொது மக்களுக்கும் அதுகுறித்த விளக்கத்தை கூறியும், மேலும் பெற்றோர்கள் மாணவர்களிடமும், மாணவர்கள் பெற்றோர்களிடமும் பல்வேறு கேள்விகளை கேட்டு கலந்துரையாடல் செய்தது சிறப்பாக அமைந்திருந்தது. எதிர்காலத்தில் மாணவர்களை கணித மேதைகளாகவும், இலக்கிய படைப்பாளிகளாகவும், அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்த ஊக்குனர்களாகவும் ,அவர்களை மேம்படுத்தும் வகையில் நிலம் மற்றும் உலகளாவிய மக்கள், பொருளாதாரம் ,அரசியல் உள்ளிட்டவைகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பள்ளியின் சார்பில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னதாக பெற்றோர்கள் மத்தியில் பேசிய நிர்வாக துணை முதல்வர் தீபக் நியூட்டன் கூறும் போது, பெற்றோர்கள் குழந்தைகளை எவ்வாறு வழிநடத்த வேண்டும் என்றும் அவர்களை நன்னடைத்தவுடன் வழிகாட்டி ,எதிர்காலத்தில் குழந்தைகள் சிறந்து விளங்க திட்டமிடலும் உடன் கூடிய அறிவு சார் விஷயங்களை ஆரம்ப முதலே வளர்த்து வந்தால் நிச்சயம் அவருடைய எதிர்காலம் சிறப்பாக அமையும். மேலும் குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமாக ஆரம்பம் முதலே அவர்களை மனோதிடத்துடன், ஒழுக்கம், பரிவு , அறிவு ஆகியவற்றை கற்றுத்தர வேண்டும் என்று பேசினார். கண்காட்சி மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை பள்ளியின் இயக்குனர்கள் டாக்டர் கபில் ,டாக்டர் வாகினி மற்றும் உள்ளிட்ட ஆசிரியர்கள் செய்திருந்தனர் .நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு கண்காட்சியினை பார்த்து அதிசயத்தினர்.