மாநில அளவிலான மாராத்தான் போட்டி

10 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட இருபாலருக்கும் 3, 5 மற்றும் 7 கிலோ மீட்டர் தூரம் என 3 பிரிவுகளிலும் நடத்தப்பட்டது. இதில் திருச்சி, சேலம், கடலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி என பல மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்திற்கு பங்கேற்பு

Update: 2025-01-12 17:16 GMT
பெரம்பலூரில் கோல்டன் கேட்ஸ் வித்யாஷரம் சார்பில் சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளையொட்டி மாநில அளவிலான மாரத்தான் போட்டி நடைபெற்றது பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு நடந்த நிகழ்ச்சியில் சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளையொட்டி அவரது உருவ படத்திற்கு எஸ்பி ஆதர்ஷ்பசேரா மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பின்னர் மாரத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கிவைத்தார். இதில் 10 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட இருபாலருக்கும் 3, 5 மற்றும் 7 கிலோ மீட்டர் தூரம் என 3 பிரிவுகளிலும் நடத்தப்பட்டது. இதில் திருச்சி, சேலம், கடலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி என பல மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் நடந்த பள்ளி கூட்டரங்கில் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு பள்ளி தாளாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். துணை தலைவர் ஹரீஸ், செயலாளர் அங்கையற்கண்ணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக பெடரல் வங்கி துணை தலைவர் ராஜாசீனிவாசன் கலந்துகொண்டு போட்டியில் முதல் மூன்று இடங்களை வென்றவர்களுக்கு முறையே ரூ.3 ஆயிரம், ரூ. 5 ஆயிரம், ரூ. 8 ஆயிரம் வீதம் ரொக்க பரிசுக்கான காசோலை மற்றும் பதக்கம், சான்றிதழ்களை வழங்கி பாராட்டி பேசினார். மேலும் முதல் 10 இடங்களை வென்றவர்களுக்கு ஆறுதல் பரிசுகளும், போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. முன்னதாக பள்ளி முதல்வர் பவித் வரவேற்றார். முடிவில் ஒருங்கிணைப்பாள் அமலா நன்றி கூறினார்.

Similar News