ஆண்டிபட்டி அருகே பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா

கண்களை கருப்பு துணிகளால் கட்டிக்கொண்டு மாணவ மாணவிகள் உரியடிக்கும் போட்டிகளும் நடைபெற்றது

Update: 2025-01-12 17:31 GMT
ஆண்டிபட்டி அருகே பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள திம்மரசநாயக்கனூர் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது தைப்பொங்கல் திருநாள் நெருங்கி வருவதையடுத்து கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதற்காக தமிழர் பாரம்பரிய முறைப்படி மாணவர்கள் வேஷ்டி, சட்டை அணிந்தும் மாணவ மாணவிகள் பட்டுப்புடவை அணிந்தும் வந்திருந்து கல்லூரியின் மையப்பகுதியில் உள்ள தரைப்பகுதியில் வண்ணக்கோலங்கள் இட்டு பொங்கல் பானை வைத்து பொங்கலோ பொங்கல் என குலவை இட்டு பொங்கல் வைத்தனர் . பின்னர் மத்தளம் ட்ரம் செட் இசை முழங்க, பொங்கல் பானைகளை தூக்கிகொண்டு கல்லூரி வளாகம் முழுவதும் ஆடிக்கொண்டே மாணவிகள் கொண்டு வர மாணவர்கள் சினிமா பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டனர் மேலும் கல்லூரி வளாகத்தில் கண்களை கருப்பு துணிகளால் கட்டிக்கொண்டு மாணவ மாணவிகள் உரியடிக்கும் போட்டிகளும் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தனித்தனியாக கயிரிழுக்கும் போட்டிகளும் நடத்தப்பட்ட நிலையில் அதில் உற்சாகமாக கலந்துகொண்டு கல்லூரி மாணவ மாணவிகள் மகிழ்ச்சியாக சமத்துவ பொங்கலை கொண்டாடினர் இதில் கல்லூரி ஆசிரியர்களும் பேராசிரியர்களும் கலந்து கொண்டு அவர்களும் சமத்துவ பொங்கல் மகிழ்ச்சியாக கொண்டாடினர்.

Similar News