ஆயுதப்படை வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. குழந்தைகளுக்கான பாட்டிலில் நீர் நிரப்புதல், சாக்கு பை ஓட்டம், 100 மீட்டர் ஓட்டம், சைக்கிள் போட்டி, இசை நாற்காலி ஆகியவையும் பெரியவர்களுக்கான கபாடி மற்றும் கைப்பந்து போட்டிகள் ஆண்கள் பெண்கள் என இருபிரிவினருக்கும் நடைபெற்றது.

Update: 2025-01-12 16:16 GMT
பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோர்களின் குடும்பத்துடன் இன்று 12.01.2025 -ம் தேதி மாவட்ட *காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா தலைமையில் பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சியை கொண்டாடினார்கள். இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. குழந்தைகளுக்கான பாட்டிலில் நீர் நிரப்புதல், சாக்கு பை ஓட்டம், 100 மீட்டர் ஓட்டம், சைக்கிள் போட்டி, இசை நாற்காலி ஆகியவையும் பெரியவர்களுக்கான கபாடி மற்றும் கைப்பந்து போட்டிகள் ஆண்கள் பெண்கள் என இருபிரிவினருக்கும் நடைபெற்றது. இந்த விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்ட போட்டியாளர்களை ஊக்கப்படுத்தியும் வெற்றி பெற்றவர்களுக்கு தனது வாழ்த்துக்கள் தெரிவித்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனது பாராட்டுக்களை தெரிவித்தார்கள். இந்த சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதுவிலக்கு மற்றும் அமலாக்கப்பிரிவு பாலமுருகன், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துணை காவல் கண்காணிப்பாளர் பிரபு மற்றும் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் தங்கபாண்டியன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் என அனைவரும் கலந்துகொண்டனர்.

Similar News