ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளி ஆண்டு விழா
குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டண சலுகை அளிக்கப்பட்டது.
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியில் 10ம் ஆண்டு ஆண்டு விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி தலைவர் ராம்குமார் தலைமை வகித்தார். துணை தலைவர் மோகனசுந்தரம், செயலாளர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் சாராதா ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக மேவரிக் பவுண்டேஷன் நிர்வாக இயக்குநர் கார்த்திக் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளிலும், சிறந்த மார்க் மற்றும் சிறந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு கோப்பைகள், பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டி பேசினார். குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டண சலுகை அளிக்கப்பட்டது. தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் நடனம், நாடகம், சிலம்பம் உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் பள்ளி ஆசிரியர்கள் ,பெற்றோர்கள், மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனர். முன்னதாக பள்ளி முதல்வர் (இடைநிலை) சந்ரோதயம் வரவேற்றார். முடிவில் துணை முதல்வர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.