புகைப்படக் கலையில் சோசியல் மீடியாவின் பங்கு பற்றிய பயிற்சி வகுப்பு

புகைப்படக் கலையில் சோசியல் மீடியாவின் பங்கு பற்றிய பயிற்சி வகுப்பு

Update: 2025-01-12 11:15 GMT
திருச்செங்கோடு வட்டார வீடியோ மற்றும் போட்டோ கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி வகுப்பு திருச்செங்கோடு KM மஹாலில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு வட்டார சங்க தலைவர் ஹிதாயத்துல்லா செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார்கள். துணை செயலாளர் பூபதி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் மாநிலத் தலைவர் மாதேஸ்வரன், நாமக்கல் மாவட்ட பொருளாளர் பொன்னுசாமி இணைச் செயலாளர் தேவேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பங்கு அதை நாம் எப்படி லாகவமாக கையாள வேண்டும் என உறுப்பினர்களுக்கு புரியும்படி எளிய முறையில் குமாரமங்கலம் ஆனந்தா ஸ்டுடியோ விஜயகுமார் அவர்கள் பயிற்சி வகுப்பு எடுத்தார் இந்த பயிற்சி வகுப்பில் முன்னாள் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு புதிய தொழில் யுக்திகளை எவ்வாறு கையாள வேண்டும் என தெரிந்து கொண்டனர் பிஆர்ஓ மூர்த்தி மற்றும் செயற்குழு உறுப்பினர் விஜயகுமார் ஆகியோர் அனைவருக்கும் நன்றி கூறினார்கள்

Similar News