நாமக்கல்லில் சாலைப்பணியாளர்கள் நூதன போராட்டம்!
ஐந்துக்கும் மேற்பட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் சார்பில் சாலையில் ஒப்பாரி வைத்து நூதன முறையில் தங்களுடைய கண்டன கோஷங்களை எழுப்பினர்.;
நாமக்கல் - மோகனூர் சாலையில் உள்ள கோட்ட பொறியாளர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி மாவட்டத் தலைவர் ஜாகிர் உசேன் தலைமையில் ஒப்பாரி முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஒப்பாரி முழக்க போராட்டத்தில் மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைத்திட வேண்டும் எனவும், நெடுஞ்சாலை பராமரிப்பு பணியை அரசே செயல்படுத்த வேண்டும் எனவும், கிராமப்புற இளைஞர்களை சாலை பணியாளராக பணி நியமனம் செய்திட வேண்டும் என ஐந்துக்கும் மேற்பட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் சார்பில் சாலையில் ஒப்பாரி வைத்து நூதன முறையில் தங்களுடைய கண்டன கோஷங்களை எழுப்பினர்.