அமைச்சர் சிவசங்கரை கண்டித்து அதிமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்
அதிமுகவை விமர்சித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரை கண்டித்து அதிமுக மகளிரணியினர், சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் நேற்று கருப்பு உடையணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம் அதிமுக என அமைச்சர் சிவசங்கர் கூறியதைக் கண்டித்தும் அதிமுக மகளிர் அணி சார்பில், அணியின் மாநில செயலாளர் வளர்மதி தலைமையில், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா முன்னிலையில் சென்னை சைதாப்பேட்டை, பனகல் மாளிகை அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மகளிர் அனைவரும் கருப்பு உடையணிந்து, திமுக அரசுக்கு எதிராகவும், அமைச்சர் சிவசங்கருக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பியும். கண்ணகி வேடத்தில் நீதி கேட்டும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.