நாமக்கல் மாவட்டத்தில் பொன்மனச் செம்மல் 108 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கழக நிர்வாகிகள் பேனர்கள் வைத்து முன்னேற்பாடு பணிகள்
நாமக்கல் மாவட்டத்தில் பொன்மனச் செம்மல் 108 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கழக நிர்வாகிகள் பேனர்கள் வைத்து முன்னேற்பாடு பணிகள்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பொதுச் செயலாளர் சசிகலா அவர்களின் ஆணைக்கிணங்க ஜனவரி 17 அன்று கழகத்தின் நிறுவனர் முன்னாள் முதலமைச்சர் பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் அவர்களின் 108 வது பிறந்த நாளை கழக நிர்வாகிகள் சிறப்பாக கொண்டாட உத்தரவிட்டிருந்தார். அதன்படி கழக நிர்வாகிகள் ஆங்காங்கே சுவரொட்டிகள் மற்றும் பேனர்கள் வைத்து அவரது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக செய்து வருகின்றனர். நாமக்கல் மாவட்ட அஇஅதிமுக சார்பில் நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர் என். கோபால் அவர்கள் தலைமையில் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல் அவர்களின் 40 அடி நிலம் கொண்ட பிளக்ஸ் பேனர் வைத்தும் மேலும் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டியும், மற்றும் ராசிபுரம் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் போன்ற இடங்களில் பேனர்கள் வைத்து முன்னேற்பாடு பணிகளை சிறப்பாக செய்து வருகின்றனர். இந்த பேனர் மற்றும் சுவரொட்டிகளில் புரட்சித்தாய் சின்னம்மா சசிகலா அவர்கள் வழியில் கழக நிர்வாகிகள் ஒன்று கூடுவோம் வெற்றி பெறுவோம், புரட்சித்தலைவர் புரட்சித் தலைவியின் புகழை மீண்டும் மக்களிடத்தில் எடுத்து செல்ல பாடுபடுவோம், மக்களுக்காகவும் மக்கள் சேவைக்காகவும் புரட்சித்தாய் அம்மா அவர்களின் வழியில் ஒன்று சேர்வோம் வெற்றி பெறுவோம் என்ற வாசகத்துடன் பல்வேறு இடங்களில் இந்த பேனர்கள் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..