உப்பிடமங்கலம்- கிராவல் மண் கடத்தி வந்த லாரியை சிறைபிடித்த ஊர் பொதுமக்கள்.
உப்பிடமங்கலம்- கிராவல் மண் கடத்தி வந்த லாரியை சிறைபிடித்த ஊர் பொதுமக்கள்.
உப்பிடமங்கலம்- கிராவல் மண் கடத்தி வந்த லாரியை சிறைபிடித்த ஊர் பொதுமக்கள். கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அனுமதி இன்றி சட்டத்திற்கு புறம்பாக கிராவல் மணல் கடத்தப்படுவதாக சமூக ஆர்வலர்களால் பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறி வருகின்றனர். கடந்த ஆறு மாதத்துக்கு மேலாக உப்பிடமங்கலம் சுற்றியுள்ள பகுதிகளில் சட்டத்துக்கு புறம்பாக கிராவல் மணல் கடத்தப்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில், நேற்று உப்பிடமங்கலம் கடைவீதியில் கிராவல் மணல் ஏற்றி வந்த டாரஸ் லாரியை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் தடுத்து நிறுத்தி சிறை பிடித்தனர். லாரி ஓட்டி வந்த ஓட்டுநரை பிடித்து விசாரித்ததில், அவர் வைத்திருந்த பர்மிட்டில் காக்காவடியில் கிராவல் மண் அள்ளப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லலாம் என்று அனுமதி இருந்தது. ஆனால், காக்காவடியில் கிராவல் மண் அள்ளப்படாமல், உப்பிடமங்கலம் அருகே மாணிக்கபுரம் என்ற கிராமத்தில் கிராவல் மண் எடுத்து வரப்படுவது தெரிய வந்தது. அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த கிராம நிர்வாக அலுவலர், மற்றும் காவல் துறையினர் பர்மிட் ரசீதை ஆய்வு செய்த பின் லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தினர். மாணிக்கபுரம் பகுதியில் விலைமதிப்பற்ற அதிக அளவிலான பச்சை கற்கள் புதைந்து உள்ளாக தகவல் உள்ளது. அந்தக் கற்களை அல்லவே மேம்போக்கான பர்மிட் வாங்கிக் கொண்டு இங்கு மண்ணை எடுத்து செல்வது விசாரணையில் தெரியவந்தது.