தப்பி ஓடிய கைதி பிடிபட்டார்.
மதுரை போலீசாரின் பிடியிலிருந்து தப்பிய கைதி இன்று போலீசாரிடம் பிடிபட்டார்.
மதுரை திருப்பரங்குன்றம் மேல பச்சேரியை சேர்ந்த ரமேஷின் மகன் கருப்புசாமி (23) என்பவர் ஆயுதத்தை பயன்படுத்தி இன்ஸ்டாகிராமில் பதிவு வெளியிட்டதின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக திருப்பாலை காயத்ரி நகரில் உள்ள நீதிபதி வீட்டிற்கு ரிமாண்ட் செய்ய போலீசார் அழைத்துச் சென்றனர். இந்நிலையில் நீதிபதி வீட்டருகே நேற்று (ஜன.11) இரவு கருப்பசாமி தப்பி ஓடினார். போலீசாரின் தேடுதல் வேட்டையில் திருப்பரங்குன்றம் பகுதியில் இன்று (ஜன.12) காலை கைது செய்யப்பட்டார்.