முத்தரையர்களுக்கு 10 % இட ஒதுக்கீடு வேண்டும்

ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி முத்தரையர்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வேண்டும் மாநில மாநாட்டில் கோரிக்கை

Update: 2025-01-12 11:52 GMT
சாதி மாதிரி கணக்கெடுப்பு முத்தரையர்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் தமிழ் தேசிய கட்சி மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திண்டுக்கல்லில் தமிழர் தேசம் கட்சி சார்பில் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் மாநிலத் தலைவர் செல்வகுமார், மாநில பொதுச் செயலாளர் தளவாய ரமேஷ், மாநில அமைப்பு செயலாளர் மகேஸ்வரன், தலைமை ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், மாநில மாணவர் அணி அமைப்பாளர் பூமி அம்பலம், மகளிர் அணி செயலாளர் சித்ரா ஜெய கிருஷ்ணன் உட்பட பலர் . பங்கேற்றனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மாநிலத் தலைவர் செல்வகுமார் கூறியதாவது: ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வகுப்புவாரி தொகுப்பு சம இட பங்கீட்டின் அடிப்படையில் முத்தரையர்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். வலையர் புணரமைப்பு வாரியத்தை உடனடியாக செயல்படுத்திட வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்திட வேண்டும். டங்ஸ்டன் சுரங்க அமைக்க வழங்கப்பட்டுள்ள உரிமைக்கு ரத்து செய்திட வேண்டும். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதில், உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். நீதிமன்றத்தில் தமிழ் மொழியை கூடுதல் வழக்காடு மொழியாக அமைத்திட வேண்டும். அறவழி போராட்டங்களுக்காக அனுமதி வழங்கிட வேண்டும். சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை அமைத்திட வேண்டும். திமுக தேர்தல் வாக்குறுதியின் படி அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வு வூதிய திட்டத்தைஅறிவித்திட வேண்டும். திருச்சிராப்பள்ளி தமிழகத்தில் இரண்டாவது தலைநகரமாக அறிவித்திட வேண்டும். சட்டசபையில் எதிர்க்கட்சியினர் யார் அந்த சார் என்று கேள்வி எழுப்பி உள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டு உள்ளார். அரசு உடனடியாக மாணவி வழக்கில், சம்பந்தப்பட்ட மற்ற குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும். பாகுபாடின்றி சட்டம் ஒழுங்கை அரசு இரும்பு கரம் கொண்டு பாதுகாத்திட வேண்டும் என கூறினார்.

Similar News