வேட்டவலம் பேரூராட்சி சார்பில் புகையில்லா பொங்கல் விழிப்புணர்வு.
உடன் நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பேரூராட்சி சார்பில் புகையில்லா பொங்கல் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பேரூராட்சி மன்ற தலைவர் கவுரி தலைமையில் செயல் அலுவலர் வரலட்சுமி பொது மக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்வின் போது உடன் பேரூராட்சி மன்ற உறுப்பினர் மற்றும் அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.