சேதமடைந்தஇடுகாட்டுப்பாதையை சரி செய்ய கிராம மக்கள் கோரிக்கை
கஞ்சாநகரம் கிராமத்தில் ஆதிதிராவிடர் சமுதாய மக்கள் பயன்படுத்தும் இடுகாட்டுக்கு மயான பாதை இல்லாததால் உயிரிழந்தவர்களின் உடலை 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு சேதமடைந்த ஒற்றையடி பாதையில் சிரமத்துடன் தூக்கிச் செல்லும் கிராமமக்கள்:-
:- மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் உள்ளது கஞ்சாநகரம் கிராமம். இங்குள்ள குடியிருப்பு பகுதியில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சுடுகாடும், 4 கிலோ மீட்டர் தொலைவில் ஆதிதிராவிட சமுதாய மக்களுக்கான இடுகாடும் உள்ளது. இதில், பிற்படுத்தப்பட் மக்களுக்கான சுடுகாடு வரையில் சாலை வசதி உள்ள நிலையில், அதன்பிறகு 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை வசதி இல்லை. அங்கிருந்த மண் சாலையும் மழைநீரில் கரைந்துபோன நிலையில், ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்தால் அவர்களது உடலை அவ்வழியாக வாகனத்தில் கொண்டு செல்ல முடியாத நிலை நிலவுகிறது. இந்நிலையில், அக்கிராமத்தில் கணேசன் என்ற ஆசிரியர் உயிரிழந்த நிலையில், அவரது உடலை 2 கிலோமீட்டர் தூரம் வரை வாகனத்தில் எடுத்துச்சென்ற அச்சமுதாய மக்கள் அதன்பிறகு உடலை தோளில் சுமந்து மேடுபள்ளம் நிறைந்த ஒற்றையடிச் சாலை வழியாக கொண்டு சென்றனர். இச்சாலையை சீரமைத்துத் தர வலியுறுத்தி பலமுறை மனுஅளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் ஆதிதிராவிடர் மக்களுக்கான சுடுகாட்டுப் பாதை என்பதால் இதனை அரசு அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என தெரிவித்துள்ள கிராமமக்கள் உடனடியாக அப்பாதையை சீரமைத்துத்தரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.