தண்டவாளத்தை கடக்க முயன்ற புள்ளி மான் ரயிலில் அடிபட்டு பலி

புள்ளி மான் ரயிலில் அடிபட்டு பலி

Update: 2025-01-12 07:30 GMT
தென்காசி மாவட்ட காட்டுப் பகுதியில் அதிகளவு புள்ளி மான்கள் உள்ளன. இந்த புள்ளி மான்கள் அப்போது அந்தப் பகுதிகளில் அதிகமாக மான்கள் இறைதடி ஊருக்குள் வருவது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை தென்காசி அருகே உள்ள வேட்டைக்காரன் குளம் கிராமத்தில் மான் ஒன்று தண்டவாளத்தை கடக்க முயன்ற சுமார் 4 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளி மான் எதிர்பாராவிதமாக ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தது. இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் ரயில்வே போலீசருக்கு தகவல் தெரிவித்தனர் விரைந்து சென்ற ரயில்வே போலீசார் ரயில் அடிபட்ட மான் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்வதற்காக அனுப்பி வைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News