கடப்பாக்கம் ஈசிஆர் பகுதியில் காஞ்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா

கடப்பாக்கம் ஈசிஆர் பகுதியில் காஞ்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா

Update: 2025-01-12 10:14 GMT
கடப்பாக்கம் ஈசிஆர் பகுதியில் காஞ்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா திமுக இளைஞரணி செயலாளரும் தமிழக துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு. காஞ்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த இடைக்கைழிநாடு கடப்பாக்கம் ஈசிஆர் பகுதியில் சமத்துவ பொங்கல் விழா திமுக மூத்த நிர்வாகிகளுக்கு ஒரு கிளி வழங்கும் விழா பொதுத் தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நிகழ்ச்சி காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் கா சுந்தர் எம்எல்ஏ அவர்களின் தலைமையில் நடைபெறுகிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக இளைஞரணி செயலாளர் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதனைத் தொடர்ந்து திமுக நிர்வாகிகளுடன் இணைந்து பொங்கல் வைத்து பொங்கல் விழா கொண்டாடப்பட்டது இதனைத் தொடர்ந்து திமுக மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கி கடந்தாண்டு பொதுத் தேர்வில் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தக்கை மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Similar News