பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகள்
பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகள்
திண்டுக்கல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பழனிச்சாமி தலைமையில் இன்று பழநி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகள் வழங்கப்பட்டது. அதேபோல் இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு விபத்தில்லா பயணம் மேற்கொள்ள ஹெல்மெட் அவசியம் குறித்த அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும் பேருந்து மற்றும் கார்களில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. இந்நிகழ்வில் போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் உடன் இருந்தனர்.