நீப்பத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பொங்கல் விழா.
உடன் பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த நீப்பத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பொங்கல் விழா இன்று நடைபெற்றது விழாவில் மாணவர்கள் புத்தாடை அணிந்து கரும்பு, மாவிலை தோரணம் கட்டி புது பானையில் பொங்கல் வைத்து கொண்டாடினர். வட்டார கல்வி அலுவலர் உதயகுமாரன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் சீமாட்டி, பள்ளி தலைமை ஆசிரியர் சிவராமன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.