நகர் பகுதியில் சிறுத்தைபுலி நடமாட்டம்
கொடைக்கானல் நகர் பகுதியில் சிறுத்தைபுலி நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் சம்பவம் அறிந்த கொடைக்கானல் வனத்துறையினர் நேரில் ஆய்வு
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அதிக அளவு வனப்பகுதிகள் உள்ளன நிலையில் அதேபோல் வனவிலங்குகள் அதிகளவு வாழ்ந்து வருவதாலும் அதிமுக ஆட்சியில் கொடைக்கானல் மலைப்பகுதியானது வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து பல நாட்களாகவே வனவிலங்குகள் காட்டெருமை, கொடைக்கானல் நகர் பகுதியில் வலம் வந்து பொது மக்களை அச்சுறுத்தி வருகின்றது. இந்நிலையில் கொடைக்கானல் நகர் முக்கிய பகுதியான சீனிவாச புறத்தில் கடந்த மூன்று நாட்களாகவே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி பொது மக்கள் கூறிவந்தனர். இந்நிலையில் நேற்று இரவு 9;30 மணியளவில் தமிழ் என்னும் இளைஞன் தனது வீட்டின் ஜன்னல் வழியாக வெளியே சத்தம் கேட்டதை தொடர்ந்து ஜன்னல் வழியாக பார்த்து உள்ளார் அப்பொழுது சிறுத்தை போன்ற உயிரினத்தை பார்த்ததாக அப்பகுதி மக்களிடம் கூறினார். அதனைத் தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் கொடைக்கானல் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் அதன் பெயரில் அப்பகுதிக்கு நேற்று இரவு வனத்துறையினர் அப்பகுதிக்கு தேடும் போது வனவிலங்குகள் கால் தடங்கல் இருந்துள்ளன. மேலும் இன்று வனத்துறையினர் நேரில் சென்று வனவிலங்குகளில் கால் தடயங்களை சேகரித்தனர் அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இப்பகுதியில் வலம் வருவது சிறுத்தையா அல்லது வேறு ஏதும்வனவிலங்கா என்று பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்த பிறகு முழுமையான விவரங்கள் தெரிய வரும் என்று கொடைக்கானல் வனத்துறையினர் கூறினார்கள் மேலும் இதனால் அப்பகுதியில் இரவு மற்றும் பகல் நேரங்களில் செல்லும் பொதுமக்கள் அச்சமடைந்து செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.