DIG தலைமையில் பொங்கல் விழா

திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் DIG தலைமையில் பொங்கல் விழா

Update: 2025-01-12 12:33 GMT
திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் திண்டுக்கல் சரக DIG.வந்திதா பாண்டே தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் முன்னிலையில் பொங்கல் விழா நடைபெற்றது. இவ்விழாவில் காவலர்களின் குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தனித்திறமைப் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற காவலர்களின் குழந்தைகளுக்கு திண்டுக்கல் சரக DIG. வந்திதா பாண்டே மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள். இந்நிகழ்வில் ASP. சிபின், ADSP.தெய்வம் உள்ளிட்ட காவலர்கள் மற்றும் காவலர்களின் குடும்பத்தினர் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர்.

Similar News