கார், பைக்கில் வந்து  சூதாடிய 6 பேர் கைது

பளுகல்

Update: 2025-01-12 12:14 GMT
குமரி மாவட்டம் புன்னாக்கரை என்ற பகுதியில் உள்ள ஒரு இடத்தில் வைத்து சிலர் சூதாடுவதாக நேற்று இரவு 8 மணி அளவில் பளுகல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். அப்போது அங்கு சூதாடி கொண்டிருந்த 6 பேர் போலீசாரை கண்டதும் தங்கள் வந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்களை அப்படியே விட்டு விட்டு தலை தெறிக்க ஓடினார்கள்.        இதை அடுத்து கார் மற்றும் பைக்குகளை பறிமுதல் செய்த போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட-நபர்கள் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தேவிகோடு பகுதி சேர்ந்த ஜோணி,  ஷாஜி, சஜி, புன்னாக்கரை பகுதி நடராஜன்,  லதி மற்றும் ஜோயி ஆகியோர் என தெரிய வந்தது.       அவர்களிடம் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ. 300 மற்றும் சூதாடிய கார்டுகளையும் பறிமுதல் செய்தனர். இதை அடுத்து போலீசார் இன்று 12-ம் தேதி காலை வழக்கு பதிவு செய்து கைது செய்து அனைவரையும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

Similar News