குமரி மாவட்டம் தேங்காபட்டணம் பகுதி வேட்டமங்கலத்தை சேர்ந்தவர் சுமித்ரா (30). இவரது கணவர் விஜி வெளியூரில் கொத்தனார் வேலை செய்து வருகிறார். விஜியின் அண்ணன் வினு (34) என்பவர் சுமித்ராவிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். சுமித்ரா இதற்கு உடன்படவில்லை. இந்த நிலையில் சம்பவ தினம் மீண்டும் சுமித்ரா வீட்டில் புகுந்த வினு ஆசைக்கு இணங்க வற்புறுத்தியுள்ளார். அவர் சம்மதிக்காத காரணத்தால் ஆத்திரமடைந்து வினு சுமித்ரா வீட்டு ஜன்னல் கதவுகளை அடித்து உடைத்து சேதப்படுத்தி உள்ளார். மேலும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து பெண்மைக்கு களங்கம் ஏற்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்ததாக புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் நேற்று வினு மீது வழக்கு பதிவு செய்தனர்.