களியக்காவிளை சாலையில் காரை நிறுத்தி மிரட்டிய நபர்

குமரி

Update: 2025-01-12 12:19 GMT
குமரி மாவட்டம்  களியக்காவிளை பகுதியில் நேற்று மாலையில் காரில் வந்து கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென சாலையில் காரை நிறுத்தினார். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை சிலர் தட்டிக் கேட்டனர். ஆனால் காரில் வந்த நபர் அந்த வழியாக சென்ற பொது மக்களை வம்பிழுத்து ரகளையில்  ஈடுபட்டார். மேலும் தான் வைத்திருந்த கத்தியை காட்டி அருகில் வந்தால் கொன்று விடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.       இது குறித்து களியக்காவிளை  தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு செல்வதற்குள் அந்த நபர் அவரது காரை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி சென்று விட்டார். போலீசார்ந்த காருக்குள் சோதனை செய்தபோது காரில் எந்தவித ஆவணங்களும் இல்லை.       இதை அடுத்து காரை பறிமுதல் செய்து களியக்காவிளை  போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். விசாரணையில்  இந்த காரின் உரிமையாளரும் பொதுமக்களிடம் ரகளையில்  ஈடுபட்டவருமான விஜயலால் என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News