குமரி மாவட்டம் சுசீந்திரம் தாணு மாலைய சுவாமி கோவிலில் கடந்த 4ம் தேதி காலை 8 மணி அளவில் மார்கழி திருவிழாவிற்காக கொடி ஏற்றத்துடன் துவங்கியது. 9ம் திருவிழாவான இன்று 12-ம் தேதி முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட நிகழ்ச்சியில் காலை 4 மணிக்கு கங்காள நாதர் பிச்சாடனராக திருவீதியுலா வரும் நிகழ்ச்சியும், காலை 7 45 மணிக்கு விநாயகர் தேர் அம்மன் தேர், சுவாமி தேர் அலங்கரிக்கப்பட்டு விநாயகர் தேரில் விநாயகரும்,சுவாமி தேரில் சுவாமியும் அம்பாளும், அம்மன் தேரில் அம்பாளும் அமரச் செய்து தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அம்பாள் தேரை பெண்கள் இழுத்து வர ரத விதியை ஒருமுறை பக்தர்கள் வடம்தொட்டுஇழுக்கும்தேரோட்ட நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு சுவாமி தந்த பல்லுக்கு எழுந்தருளள்நிகழ்ச்சியும் கலை நிகழ்ச்சிகளும் இரவு 12 மணிக்கு தனது தாய் தந்தையர்கள் விழாவில் பங்கெடுத்துக் கொள்வதற்காக வந்த கோட்டாறு வலம்புரி விநாயகர் மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி வேளிமலை முருகர் சுவாமி ஆகியோர் தனது தாய் தந்தைகளை மூன்று முறை வலம் வந்து பிரிந்து செல்லும் சப்தவர்னநிகழ்ச்சி நடைபெறுகிறது.