சங்கரநாராயணசாமி கோவிலில் திருவாதிரை தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

சங்கரநாராயணசாமி கோவிலில் திருவாதிரை தேரோட்டம்

Update: 2025-01-12 07:09 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்க நாராயணசாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் திருவாதிரை திருவிழா நடைபெறுவது வழக்கம் தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் காலை மாலை இருவேளைகளிலும் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீடு உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த நாலாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது இதனை முன்னிட்டு இன்று காலை சுவாமி அம்பாள் தேரில் எழுந்த நிகழ்ச்சி நடைபெற்றது இதை தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. இதுல தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. கோவில் முன்பு நடைபெற்ற தேர் முக்கிய ரதவீதி வழியாக மீண்டும் கோவில் முன்பு நிறைவடைந்தது. தேர் முக்கிய ரதி வீதி வழியாக மீண்டும் கோவில் முன்பு வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

Similar News