திருப்பத்தூரில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக சுத்திகரிப்பு குடிநீர் நிலையத்தை சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்
திருப்பத்தூரில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக சுத்திகரிப்பு குடிநீர் நிலையத்தை சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர் இரண்டாவது வார்டு பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து 8 லட்சம் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சக்தி நகர் இரண்டாவது வார்டு பகுதியில் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி நிதியில் 2023_ 24 நிதியாண்டு ஒதுக்கீட்டின் கீழ் பல்நோக்கு கட்டிடம் 8 லட்சம் மதிப்பீட்டில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சுத்திகரிக்கப்பட்ட (Ro) குடிநீர் 5 ரூபாய் காயின் மூலம் 25 லிட்டர் அளவில் பொதுமக்கள் பெற்றுக்கொள்ளும் சுத்திகரிப்பு குடிநீர் நிலையத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி ரிப்பன் வேட்டி திறந்து வைத்தார் உடன் திருப்பத்தூர் திமுக நகர கழக செயலார் ராஜேந்திரன் மற்றும் நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன் மற்றும் கட்சி நிருவாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர் பின்னர் இரண்டாவது வார்டு கவுன்சிலர் குட்டி தலைமையில் பொதுமக்களுடன் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர் பின்னர்ஆயிரம் பேருக்கு புத்தாடை வழங்கி இனிப்புகள் வழங்கி சிறப்பு செய்தார்